வெளியில் வந்த அதிசயம்

நன்றி குங்குமம் முத்தாரம்

பருவ நிலை மாற்றத்தின் காரணமாக உலகமெங்கும் கோடை சுட்டெரிக்கிறது. கடந்த ஜூனில் ஸ்பெயினில் கடுமையான வெப்பம் பதிவானது. அளவுக்கதிகமான வெப்பத்தால் அங்கே பல இடங்கள் வறட்சிக்குள்ளாயின. குறிப்பாக காசரஸ் பகுதியில் உள்ள ஒரு நீர் நிலையும் வறண்டது. அதனால் அதற்குள்ளே இருந்த ‘ஸ்டோன்ஹெஞ்ஜ்’ எனப்படும் கல் தூண்கள் வெளியே தெரிந்தன.

சுமார் நூற்றுக்கு மேற்பட்ட கிரானைட் தூண்கள் நிலத்தில் ஆழமாக பதித்து வைக்கப்பட்டிருந்தன. 5000 வருடங்களுக்கு முந்தைய இந்த ஸ்டோன்ஹெஞ்ஜை வெளியில் வந்த அதிசயம் என்கிறார்கள். ஒருவேளை இது பழைய கோவிலாக இருக்கக்கூடும் என்று தொல்லியலாளர்கள் ஆராய்ச்சி செய்துவருகின்றனர்.

Related Stories: