தினமும் இரும்பு மழை...அதி தீவிர வெப்பம்...முடிவில்லாத இருட்டு...பிரமாண்ட கோள் கண்டுபிடிப்பு!

தினமும் அந்திமழை அதுவும் இரும்பு மழை பொழியும் அதிதீவிர வெப்பமுள்ள பிரம்மாண்ட கோள் ஒன்றை ஜெனீவா பல்கலைக்கழக வானிலை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூமியில் இருந்து 640 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் இந்த கோளுக்கு WASP 76b என்று பெயரிட்டுள்ளனர். இந்த கோளின் பகல் நேர வெப்பநிலை இரண்டாயிரத்து 400 டிகிரி செல்சியஸ் என்பதால் இந்த கோளில் உள்ள இரும்பு உள்ளிட்ட உலோகங்கள் ஆவியாகின்றன. இரவில் வீசும் வேகமான காற்றால் இந்த ஆவி குளிர்ந்து இரும்புத் துளிகளாக மாறி மழையாகப் பெய்கிறது.

இது தினமும் இரவில் நடப்பதாக ஜெனீவா பல்கலைக்கழக பேராசிரியர் டேவிட் எரன்ரிச் என்பவரின் ஆய்வை சுட்டிக்காட்டி Nature அறிவியல் இதழ் செய்தி வெளியிட்டுள்ளது. நமது நிலாவைப் போல இந்த கோளின் ஒரு பக்கத்தை மட்டுமே காண முடிவதாகவும் அதன் மறுபக்கம் முடிவில்லாத இருட்டில் இருப்பதாகவும் ஆய்வு தெரிவிக்கிறது. இந்த கோளின் இரவு நேர குறைந்த பட்ச வெப்பநிலை ஆயிரத்து 500 டிகிரி செல்சியஸ் வரை இருப்பதாவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

Related Stories: