லூசியின் பயணம்

நன்றி குங்குமம் முத்தாரம்

புதுப்புது ஆச்சர்யங்களும் கண்டுபிடிப்புகளும் நிகழும் ஒரு இடம் விண்வெளி. அதனால் அமெரிக்காவின் நாசா ஓயாமல் ஏதோவொரு ஆய்வை மேற்கொண்டு வருகிறது . அடுத்த வருடம் விண்வெளிக்கு லூசி என்ற விண்கலத்தை அனுப்புவதற்கு இப்போதே திட்டமிட்டு வருகிறது. லூசியின் பயணம் 21- ம் நூற்றாண்டின் முக்கிய விண்வெளிப் பாய்ச்சலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

எதற்கு இந்த விண்கலம்?  

ஜுபிடர் கிரகத்தின் சுற்றுப்பாதையில், ‘யூரிபேட்ஸ்’ என்ற விண்கற்கள் தொகுதி ரொம்பவே மர்மம் நிறைந்த பகுதியாக இருந்து வருகிறது. இதைப் பற்றி ஆய்வு நடத்தத்தான் லூசி செல்கிறது. இந்த  யூரிபேட்ஸ் 63-72 கிலோ மீட்டர் விட்டம் கொண்டவை.  இது எழுப்பும் வெளிச்சம், சந்திரனின் வெளிச்சத்தைவிட 6000 மடங்கு அதிகமாய் இருப்பதாகச் சொல்கின்றனர்.  முன்பு சந்திரனை உண்மையா என அறியவே மூன்று, நான்கு தடவை சோதிக்க வேண்டி வந்தது குறிப்பிடத்தக்கது.  லூசி விண்கலம் வினாடிக்கு 5.8 கிலோ மீட்டர் வேகத்தில் பயணித்து 4 பில்லியன் மைல்களைக் கடக்கப் போகிறது. 6 வருடங்களுக்குப்பின், 2027-ம் ஆண்டு ஆகஸ்டு 12-ம் தேதி, ஜுபிடரின் சுற்றுப்பாதையில் நுழைந்து மேற்கண்ட தொகுதிகளை ஆய்வு செய்யும் என திட்டமிட்டுள்ளனர்.  

க்யூபர் பெல்ட்டில் இருந்த கிரகம் ப்ளூட்டோ சுக்கு நூறாகியது. இந்த 1,00,000 விண்கற்கள் தலா 100 கி.மீட்டர் விட்டம் கொண்டவை. இவையும் விண்ணில் சுற்றி வருவதையும் கண்டுபிடித்துள்ளனர். இவற்றிலிருந்து பிய்த்துக்கொண்டுதான் ‘யூரிபேட்ஸ்’ தொகுதி, ஜுபிடரைச் சுற்றி வருகிறது எனவும் கூறுகின்றனர். இந்த லூசியின் பயணம் வெற்றியடைய இன்னமும் ஏழு வருடம் காத்திருக்க வேண்டும். இப்படியான ஒரு பயணம் அரங்கேறப்போவது இதுவே முதல் முறை.

Related Stories: