தொடங்கியது சந்திரயான் -3 திட்டப்பணி!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி-வேலை வழிகாட்டி

இந்தியாவின் முதல் முயற்சியாக சந்திரனில் நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் மென்மையான-தரையிறங்க, சந்திரயான் 2 செப்டம்பர் 7, 2019 அன்று (failed on September 7, 2019) தோல்வியடைந்தது. சந்திரயான்-2 விக்ரம் விண்கலம் தரையிறங்கும்போது, வேகத்தடுமாற்றத்தால் விபத்துக்குள்ளானது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். இந்நிலையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) தலைவர் கே.சிவன் சமீபத்தில் ஒரு விண்வெளி நிகழ்வில் கலந்துகொண்டபோது, ‘‘2020-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அல்லது 2021-ஆம் ஆண்டின் முற்பகுதியில் சந்திரனின் தென் துருவத்திற்கு அருகில் ஒரு விண்கலம் மற்றும் ஒரு ரோவரை மென்மையாக தரையிறக்கும் லட்சியப் பணிக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.

சந்திரனின் தென் துருவத்திற்கு அருகே ஆளில்லா விண்கலத்தை தரையிறக்கும் எங்கள் மூன்றாவது சந்திர திட்டத்தில், நாங்கள் பணியாற்றத் தொடங்கியுள்ளோம். 2021-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் லேண்டர் மற்றும் ரோவரை ஏவுவதற்கான திட்டப்பணி, வேகமடைந்துள்ளது. சந்திரயான்-3-க்கு ஒரு லேண்டர் மற்றும் ரோவர் மட்டுமே இருக்கும் என்பதால், சந்திர விண்கலத்திற்கு ரூ. 610 கோடி செலவாகும், இதில் ஏவுதள ராக்கெட்டுக்கு ரூ. 360 கோடி அடங்கும்” என்று சிவன் கூறியுள்ளார்.

Related Stories: