அதிக காற்றுமாசு மிக்க தலைநகரம் டெல்லி உலகின் 30 மாசு நகரங்களில் இந்தியாவில் மட்டும் 21: ஆய்வறிக்கையில் தகவல்

புதுடெல்லி: அதிக காற்றுமாசு உள்ள தலைநகரமாக டெல்லி விளங்குகிறது. உலகில் காற்று மாசு அதிகமுள்ள 30 நகரங்களில் 21 நகரங்கள் இந்தியாவில் உள்ளது ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.  `உலக காற்று தர அறிக்கை - 2019’ அடிப்படையாக கொண்டு காற்று மாசு அதிகமுள்ள நகரங்கள் தொகுக்கப்பட்டுள்ளது. ஐகியூஏர் ஏர் விசுவல் என்ற அமைப்பு தொகுத்துள்ள இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: உலகில் காற்றுமாசு அதிகமுள்ள நகரமாக உத்தரப் பிரதேசத்தில் உள்ள காசியாபாத் உள்ளது. இதற்கு அடுத்த இடங்கள் சீனாவின் ஹோடன் நகரத்துக்கும், பாகிஸ்தானில் உள்ள குஜ்ரன்வாலா மற்றும் பைசலாபாத் நகரங்களுக்கும்  கிடைத்துள்ளது. 5வது இடம் டெல்லிக்கு கிடைத்துள்ளது. உலகில் 30 நகரங்கள் காற்றுமாசு அதிகமுள்ள நகரங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 21 நகரங்கள் இந்தியாவில் உள்ளன.

காற்று மாசு அடிப்படையில் காசியாபாத், டெல்லி, நொய்டா, குருகிராம், கிரேட்டர் ெநாய்டா, பந்த்வாரி, லக்னோ, புலந்த்சாகர், முசாபர்நகர், பக்பாத், ஜிந்த், பரிதாபாத், கோராவுட், பிவாடி, பாட்னா, பல்வால், முசாபர்பூர், ஹிசார், குத்தைல்,  ஜோத்பூர், மொரதாபாத் என இந்திய நகரங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன.காற்று மாசு அதிகமுள்ள நாடுகள் பட்டியலில் வங்கதேசம் முதலிடம் பிடித்துள்ளது. பாகிஸ்தான் 2ம் இடம், மங்கோலியா 3ம் இடம், ஆப்கானிஸ்தான் 4ம் இடம், இந்தியா 5வது இடத்தை பிடித்துள்ளது.

டெல்லி காற்றுமாசு அதிகமுள்ள தலைநகரங்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஐகியூஏர் ஏர் அமைப்பின் முதன்மை நிர்வாக அதிகாரி பிராங்க் ஹம்மாஸ் கூறுகையில், `70 லட்சம் பேர் ஒவ்வொரு ஆண்டும் காற்று மாசுக்கு பலியாகி வருகின்றனர். காற்று மாசுவை கட்டுப்படுத்த இந்தியா எடுத்துள்ள நடவடிக்கை  போதுமானதாக இல்லை’ என தெரிவித்துள்ளார்.

Related Stories: