வரலாற்றிலேயே முதன்முறையாக சீன நாடாளுமன்ற கூட்டம் ஒத்திவைப்பு

பீஜிங்: சீனாவில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாதத்தில் நாடாளுமன்றம் கூடும். இதில் அரசின் திட்டங்கள் மற்றும் பட்ஜெட் உள்ளிட்டவற்றுக்கு அனுமதி அளிக்கப்படும். இந்நிலையில் நாட்டில் கொரோனா வைரஸ் பரவி வருவதால் நாடாளுமன்ற கூட்டத்தை ஒத்திவைப்பதற்கு திட்டமிடப்பட்டது. இதனை முன்னிட்டு நாடாளுமன்ற நிலைக்குழு கூடி ஆலோசித்தது. இதில் வருகிற 5ம் தேதி தொடங்க இருந்த நாடாளுமன்றத்தின வருடாந்திர கூட்டத்தை ஒத்திவைப்பது என முடிவு செய்யப்பட்டது. வரலாற்றிலேயே முதல் முறையாக சீன நாடாளுமன்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: