தேசிய வரைபட கேக் வெட்டி சர்ச்சையில் நேபாள பிரதமர்

காத்மாண்டு;  நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி. இவரது 69வது பிறந்த நாள் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி அவரது சொந்த ஊரான கிழக்கு நேபாளத்தின் தெர்ஹாத்தும் பகுதியில் நடந்த பிறந்தநாள் ெகாண்டாட்டத்தில் பிரதமர் ஒலி, அவரது மனைவி ராதிகா சாக்கியா, பள்ளி மாணவர்கள், நெருங்கிய நண்பர்கள் என பலர் பங்கேற்றனர். இதையொட்டி வெட்டப்பட்ட 15 கிலோ எடையுள்ள கேக் காத்மாண்டுவில் இருந்து நிகழ்ச்சி நடைபெற்ற இடத்துக்கு ஹெலிகாப்டரில் கொண்டு வரப்பட்டது. நேபாள வரைபடம் வரையப்பட்டிருந்த அந்த கேக்கை பிரதமர் ஒலி, கத்தியால் வெட்டி அங்கிருந்தவர்களுக்கு கொடுப்பது போன்ற புகைப்படம் நேற்று சமூகவலைதளங்களில் வைரலாக பரவியிருந்தது. இதுபற்றி அறிந்த நெட்டிசன்கள் பிரதமர் ஒலிக்கு தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக அவர்கள் இணையதளத்தில் வெளியிட்டுள்ள கண்டன பதிவில், ‘‘நேபாள குற்றவியல் சட்டம் 151வது பிரிவின் கீழ் தேசியகீதம், தேசிய கொடி உள்ளிட்டவற்றை அவமதிப்பு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவமதிப்பு செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வாய்ப்புள்ளது. நேபாள தேச வரைபடத்தை அவமதிப்பு செய்த பிரதமர் மன்னிப்பு கேட்கவேண்டும்’’ என்று கூறியுள்ளனர்.

Related Stories: