மக்களை கடனாளியாக மாற்றியது அரசு : திருமாவளவன் குற்றச்சாட்டு

சென்னை: மக்களை கடனாளியாக மாற்றியது தமிழக அரசு தான். எனவே, அதற்கான பொறுப்பை அரசே ஏற்க வேண்டும் என்று திருமாவளவன் கூறினார். சென்னை விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளாவன் அளித்த பேட்டி:ஜெயலலிதா பிறந்த நாளை சிறுமிகள் பாதுகாப்பு நாள் என தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. ஆனால் சிறுமிகள், பெண்கள், தலித்கள், பழங்குடியினர் தமிழகத்தில் பாதுகாப்பற்ற நிலையில் வசிக்கின்றனர். அவர்களுக்கான பாதுகாப்பை தமிழக அரசு உறுதிபடுத்தவேண்டும். தமிழக அரசு நான்கரை லட்சம் கோடி கடனில் உள்ளது.

அந்தக் கடன் திருப்பி அடைக்கப்பட வேண்டிய ஒன்று. தமிழக மக்களை கடனாளியாக இல்லாத ஒரு நிலையில் ஆட்சியை நடத்தவேண்டிய பொறுப்பு ஆட்சியாளர் களிடம் உள்ளது. எனவே ஆளும் கட்சிதான் இந்த கடனுக்கு பொறுப்பேற்க வேண்டும். எதிர்கட்சிகளின் மீது பழியைப்போட்டு ஆளும் கட்சி தப்பிக்க நினைக்கக் கூடாது. ஆட்சியில் ஆளும் கட்சியாக உள்ள அதிமுக இதற்கு பொறுப்பேற்க வேண்டும். அதற்கு பதில் சொல்ல வேண்டும்.

தமிழகத்தில் ஏற்கனவே வேதாந்தா நிறுவனம் ஒஎன்ஜிசி நிறுவனம் ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டுள்ள லைசன்ஸ்கள் எதையுமே ரத்து செய்யாமல் பாதுகாக்கப்பட்ட வேளாண்மை மண்டலமாக எப்படி அறிவிக்க முடியும் எனவே தமிழக அரசு அவ்வாறு அறிவித்திருப்பது ஒரு ஏமாற்றுத் தனமான மோசடி வேலை.

Related Stories: