மணலி முதல் தேனாம்பேட்டை வரை தொடர்ச்சியாக 18 இடங்களில் செல்போன் பறிப்பு : கொள்ளையனுக்கு மக்கள் தர்மஅடி

சென்னை: சென்னை தேனாம்ேபட்டை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டல் முன்பு 2 வாலிபர்கள் நேற்று முன்தினம் இரவு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த 2 நபர்கள், வாலிபர் ஒருவரிடம் முகவரி கேட்பது போல் நடித்து செல்போனை பறித்துக்கொண்டு பைக்கில் தப்பினர்.  இதை பார்த்த அருகில் இருந்த பொதுமக்கள் வழிப்பறி கொள்ளையர்களை தங்களது பைக்கில் பின்தொடர்ந்து சென்றனர். பின்னர் தேனாம்பேட்டை கே.பி.தாசன் சாலை அருகே கொள்ளையர்களின் பைக் மீது பொதுமக்கள் தங்களது பைக்கை மோதி கீழே தள்ளிவிட்டனர். அப்போது கொள்ளையர்களில் ஒருவன் தப்பி ஓடிவிட்டான். பைக் ஓட்டி வந்த மற்றொரு கொள்ளையனை பொதுமக்கள் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தேனாம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் இருந்து வழிப்பறி கொள்ளையனை மீட்டனர். பிறகு அவனிடம் விசாரணை நடத்திய போது, வண்ணாரப்ேபட்டையை சேர்ந்த பாலாஜி (22) என்றும், தனது கூட்டாளியுடன் சேர்ந்து நேற்று முன்தினம் மாலை மணலியில் இருந்து தொடர்ச்சியாக வழிநெடுக்கிலும் 18 பேரிடம் செல்போன் பறித்து வந்ததும், கடைசியாக தேனாம்பேட்டை நட்சத்திர ஓட்டல் அருகே செல்போன் பறித்தபோது சிக்கியதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் செல்போன் திருடன் பாலாஜியை கைது செய்து அவனிடம் இருந்து 18 செல்போன்கள் மற்றும் வழிப்பறிக்கு பயன்படுத்திய பைக் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பி ஓடிய மற்றொரு கொள்ளையனை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: