மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளிகளில் ஸ்டாலின் பிறந்தநாள் கொண்டாட்டம் : சென்னையில் நடந்த மாநில செயற்குழுவில் முடிவு

சென்னை: மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளிகளில் கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்ற செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது. தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றச் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் சென்னையில் நடந்தது. கூட்டத்துக்கு மாநிலத் தலைவர் ரெ.தங்கம் தலைமை தாங்கினார்.

பொதுச்செயலாளர் எஸ்.சரவணகுமார், பொருளாளர் பா.வெங்கடேசன், துணைப்பொதுச்செயலாளர்கள் செங்கை இரா.வெங்கடேசன், க.இளங்கோவன், சங்க மக்கள் தொடர்பு அலுவலர் தி.நகர் பா.சக்திவேல் முன்னிலை வகித்தனர். க.துரைராஜ், இளங்கோ, ஆர்.ஜமுனா ராணி வரவேற்றனர்.கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் மார்ச் 1, இளைஞர்  எழுச்சி நாளாக தமிழகம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளில் கொண்டாடப்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித் தொகை 1000லிருந்து 5000 ஆக உயர்த்தி தமிழக அரசு வழங்க வேண்டும் உள்ளிட்ட 26 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: