ஏஜிஆர் கட்டணம்: அதிகாரிகள் ஆலோசனை

புதுடெல்லி: தொலைத்தொடர்பு நிறுவனங்களின் ஏஜிஆர் கட்டண விவகாரம் தொடர்பாக, டெல்லியில் உயர் அதிகாரிகள் நேற்று ஆலோசனை நடத்தினர். புதிய தொலைத்தொடர்பு கொள்கையின்படி, தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்கள் தங்கள் மொத்த வருவாயில் குறிப்பிட்ட சதவீதத்தை உரிம கட்டணமாக மத்திய அரசுக்கு செலுத்த வேண்டும். இதை எதிர்த்து பாரதி ஏர்டெல், வோடபோன் ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. உச்ச நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, அதிகபட்சமாக வோடபோன் ஐடியாக 53,000 கோடிக்கு மேல் செலுத்த வேண்டும். இதுவரை 3,500 கோடிதான் செலுத்தியுள்ளது.

ஏர்டெல் 35,000 கோடி நிலுவையில் 10,000 கோடி மட்டுமே செலுத்தியுள்ளது. இந்த விவகாரத்தில் அரசு உதவ தொலைத்தொடர்பு நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், மத்திய அரசு உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம், டெல்லியில் தொலைத்தொடர்பு துறை அலுவலகத்தில் நடந்தது. இதில், இந்த சிக்கலில் இருந்து தொலைத்தொடர்பு நிறுவனங்களை மீட்பதற்கான வழிவகைகள் ஆராயப்பட்டன என மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: