பன்னாட்டு பானங்களுக்கு டாட்டா உள்ளூர் குளிர்பானங்களுக்கு மவுசு: கோககோலா, பெப்சி திணறல்

மும்பை: பன்னாட்டு குளிர்பானங்களுக்கு இருந்து வந்த மவுசு சிறிது சிறிதாக குறைந்து வருகிறது. மாறாக, உள்ளூர் குளிர் பானங்களுக்கு மக்கள் இடையே வரவேற்பு அதிகரித்து வருகிறது. குளிர்பானங்கள் என்றாலே, பெப்சி, கோககோலா என்றாகி விட்ட காலம் போய், சமீப காலமாக பன்னாட்டு பானங்களை குடிப்போர் எண்ணிக்கை சரிந்து வருகிறது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் 20 ஆயிரம் கோடி ரூபாய் வர்த்தகம் கொண்டுள்ள குளிர்பான வர்த்தகத்தில் பன்னாட்டு குளிர்பான நிறுவனங்களில் கோலா பங்கு 49 சதவீதம், பெப்சி பங்கு 19.6 சதவீதமாக இருந்தது. இதில் இப்போது உள்ளூர் குளிர்பானங்கள் பங்கு 24 சதவீதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இது பன்னாட்டு நிறுவனங்களை அதிர வைத்துள்ளது.

தமிழகத்தில் காளிமார்க் குரூப் தயாரித்து வெளியிடும் பவன்டோ குளிர்பானம், சிறிய நகரங்களில் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பன்னாட்டு பானங்கள் குடிக்க மக்கள் தயாரில்லை. ‘இதுவரை தமிழகத்தில் மட்டும் விற்பனை செய்யப்பட்டு வந்த குளிர்பானம் இப்போது தென் மாநிலங்களில் விற்பனை செய்ய துவங்கியுள்ளது.காளிமார்க் குரூப் இணை நிர்வாக இயக்குனர் ரமேஷ் கூறுகையில், உள்ளூர் பானங்கள் என்ற வகையில் தான் நாங்களும் விற்று வந்தோம்.  எங்களுக்கு பன்னாட்டு நிறுவனங்கள் போல வர்த்தகம் இல்லை; பட்ஜெட்டும் கிடையாது. மக்கள் வரவேற்பு காரணமாக இப்போது அதிக அளவில் விற்பனை ஆகி வருகிறது என்றார். கோலா, பெப்சிக்கு அடுத்தபடியாக போட்டியில் இருப்பது தம்ஸ்அப், ஸ்ப்ரைட் பானங்கள் தான். இந்த பானங்களும் விற்பனை குறைந்து விட்டதால், இப்போது ஆய்வு செய்து வருகிறது.

நீல்சன் அமைப்பு வெளியிட்ட சர்வே அறிக்கையில், ‘கடந்தாண்டு ஒட்டுமொத்தமாக பார்த்தால் குளிர்பானங்கள் விற்பனை இந்தியாவில் குறைவு தான்; மொத்தத்தில், குளிர்பானங்கள் 0.5 சதவீதம்  விற்பனை அதிகரித்துள்ளன. இதில் பெபசி, ேகாககோலா குளிர்பானங்கள் 2.2 சதவீதம் அதிகரித்துள்ளது. உள்ளூர் பானங்கள் 1.2 சதவீதம் அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளது. அதிக வரி காரணமா? பன்னாட்டு குளிர்பானங்கள் மீதான வரி 40 சதவீதம் வரை போடப்படுகிறது. இதனால் ஒரு லிட்டர் குளிர்பானம் விலை 90 ரூபாய் விற்பனை ஆகிறது. அதே சமயம், உள்ளூர் பானங்கள் விலை குறைவு தான். 2 லிட்டர் பானங்களே விலை குறைவு தான்.

Related Stories: