சென்னை: ஹோண்டா நிறுவனம், 125 சிசி மோட்டார் பைக்கை புதிய மேம்படுத்தப்பட்ட வாகனத்தை ஷைன் என்ற பெயரில் அறிமுகம் செய்துள்ளது. அடுத்த தலைமுறை வாகனம் ஷைன் விலை ரூ67, 857. புதிய அம்சங்கள் நிறைந்த ஹோண்டா ஷைன் பிஎஸ் -6 வாகனம் இப்போது 5 ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் மற்றும் 14 சதவீத கூடுதல் மைலேஜ் அம்சங்களுடன் வருகிறது. இதில் பொருத்தப்பட்ட 125 சிசி இன்ஜின், ஈஎஸ்பி (மேம்படுத்தப்பட்ட ஸ்மார்ட் பவர்) மூலம் இயக்கப்படுகிறது மேலும், பி.எஸ்.-6 ஷைன் வாகனம், புதிய தொழில்நுட்பத்துடன் 14 சதவீதம் அதிக மைலேஜ் தருகிறது. புதிய 5-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் மென்மையான மற்றும் திறன் வாய்ந்த சவாரியை வழங்குகிறது. புதிய டிசி ஹெட்லேம்ப் வசதியானது, மெதுவான வேகத்தில் செல்லும்போதும் மற்றும் இரவு சவாரிக்கும் நீடித்த வெளிச்சத்தை வழங்குகிறது.