டாப் 5 மின்சாரகார்கள்

2020-ம் ஆண்டிற்கான வாகன கண்காட்சி நொய்டாவில் நடைபெற்றது. இதில், ஏராளமான வாகன உற்பத்தி நிறுவனங்கள் அவற்றின் புதுமுக வாகனங்களை காட்சிப்படுத்தின. குறிப்பாக, மின்சார வாகனங்களின் வருகையும் அதிகமாகவே காணப்பட்டன. இனி, இந்திய சாலைகளை வெகு விரைவில் மின்வாகனங்கள் ஆளும் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெரிகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் புதிய மின் வாகனங்களின் அறிமுகம் அதிகரிக்க துவங்கியுள்ளது. இந்த வருகை, மேலும் சூடுபிடிக்கும் வகையில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் ஏராளமான மின் வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அதில், டாப் 5 மின்சார கார்களின் சிறப்பம்சங்கள் இதோ...

கியா சோல் இவி

கியா நிறுவனத்தின் மற்றொரு மின்சார காரின் அறிமுகமாக சோல் இவி இருக்கிறது. இந்த காரில் பொருத்தப்பட்டுள்ள லிக்யூட் கூல்ட் லித்தியம் அயன் பாலிமர் பேட்டரி, 64kWh திறன் கொண்டதாகும். இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 450 கி.மீ. தூரம் வரை செல்ல முடியும். கியா நிறுவனம் இந்தியாவில் கால் தடம் பதித்தபோது 16 எலெக்ட்ரிக் வாகனங்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் என தெரிவித்தது. இதன் அடிப்படையில் கியா சோல் இவி 2025ம் ஆண்டிற்குள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: