நாட்டுக்கோழி மிளகுக்கறி

செய்முறை :நாட்டுக்கோழிக்கறியை கழுவி தண்ணீரை வடிகட்டி, மஞ்சள் தூளை பிரட்டி, ஒன்றரை மணி நேரம் தனியாக வைக்கவும். பல்லாரியை சிறியதாக நறுக்கவும். வாணலியில் எண்ணெய் காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை மற்றும் பல்லாரியை போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும். இதனுடன் தயிர், மிளகு, இஞ்சி, பூண்டு விழுது, கரம் மசாலா சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும், நாட்டுக்கோழிக்கறியை அரை மணி நேரம் வரை வேக வைக்கவும். அவ்வப்போது கிளறவும். தேவையான அளவு உப்பு சேர்க்கவும். கோழிக்கறி நன்கு வெந்ததும், சிறிதளவு மஞ்சள்தூள், மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும். மிளகு கறியுடன் கலந்ததும் சிறிதளவு கொத்தமல்லி, புதினா இலைகளை போட்டு இறக்கவும். இட்லி, சூடான சாதத்துக்கு ஏற்ற சுள் சுவையில் நாட்டுக்கோழி மிளகுக்கறி ரெடி.

Related Stories: