கொரோனா எனும் உயிர்க்கொல்லி!

நன்றி குங்குமச்சிமிழ் கல்வி - வேலை வழிகாட்டி

உலகையே அச்சுறுத்தலில் தள்ளியிருக்கிறது கொரோனா வைரஸ். இது சீனாவிலிருந்து தொடங்கி, உலகின் பல்வேறு நாடுகளுக்கும் மிக வேகமாகப் பரவி வருகிறது. சீனாவில் ஹூகான் மாகாணத்தில் உள்ள மீன் சந்தையிலிருந்து கொரோனா என்ற ஒரு வகை வைரஸ் பரவியதாக சொல்லப்படுகிறது. இது முதன்முதலாகக் கடந்த டிசம்பர் மாதம் கண்டுபிடிக்கப்பட்டது. கொரோனா வைரஸின் எதிரொலியாக சீனாவிலிருந்த இந்திய மக்கள் மற்றும் மாணவர்கள் டெல்லி அழைத்து வரப்பட்டனர். கடந்த இரு தினங்களாக ஏர் இந்தியா சிறப்பு விமானம் மூலம் அழைத்து வரப்பட்டனர். முதல் நாள் 324 பேரும், மறு நாள் 323 பேரும் இந்தியா வந்தடைந்தனர்.

சீனாவின் ஹுபே மாகாணத்திலிருந்து அழைத்துவரப்பட்ட கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமுள்ள மாணவர்களுக்காக, ஹரியானா மாநிலம், மானேசரில் தனி மருத்துவ முகாமை ராணுவம் அமைத்துள்ளது. இதேபோல், கொரோனா வைரஸ் பாதிப்பு அறிகுறி உள்ளவா–்களை தனியாக வைத்து, அடிப்படை மருத்துவச் சிகிச்சை அளிப்பதற்காக ஐடிபிபி (இந்தோ-திபெத் எல்லைக் காவல் படை) சார்பில் தில்லியில் 600 படுக்கைகளுடன் தனி மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது. அத்துடன், தில்லியிலுள்ள சஃப்தா–்ஜங் மருத்துவமனையில் 50 படுக்கைகளுடன் தீவிர சிகிச்சைப் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் வராமல் இருக்க முழு எச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் நாமும் கொஞ்சம் கவனத்தோடும் விழிப்புடனும் இருப்பது நல்லதுதானே. ​கொரோனா என்னும் கொடிய உயிர் குடிக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டால் மூக்கு ஒழுகுதல், தலைவலி, இருமல், மேல் சுவாசக் கோளாறு, தொண்டை கரகரப்பு, காய்ச்சல்,உடல் சோர்வாக இருப்பது போன்ற அறிகுறிகள்தான் ஆரம்பத்தில் இருக்கும். இவை வழக்கமாக இருப்பதுதானே என அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது. இந்த அறிகுறிகள் இருந்தால் முதலில் மருத்துவரிடம் போய் சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.

Related Stories: