சூறாவளியைத் தாங்கும் வீடு

நன்றி குங்குமம் முத்தாரம்

கனடாவின் நோவா ஸ்காட்டியாவில் உள்ள ஒரு கிராமம். அங்கே உள்ள ஒரு வீடு தான் இப்போது ஹாட் டாக். அந்த வீட்டைத் தூரத்திலிருந்து பார்த்தால் மர வீட்டைப் போல காட்சிதருகிறது. ஆனால், அருகில் போய் பார்த்தால்தான் தெரிகிறது அது மர வீடு அல்ல; பிளாஸ்டிக் வீடு என்று. ஆம்;  6 லட்சம் பிளாஸ்டிக் பாட்டில்களை மறுசுழற்சி செய்து இந்த வீட்டைக் கட்டியிருக்கின்றனர்.   

இந்த வீட்டின் சுவர் 6 இன்ச் தடிமன் கொண்டது. அதே நேரத்தில் குறைவான எடையைக் கொண்டது. மழை, வெப்பம், சத்தம், குளிர் என்று எதுவும் நுழைய முடியாது. தவிர, 300 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடிய சூறாவளியைக் கூடத் தாங்கும் வல்லமை வாய்ந்தது இந்த வீடு. இது ஒரு சோதனை முயற்சி. இந்த வீட்டில் மனிதர்கள் தங்கி, அவர்கள் வாழ உகந்ததாக என்று பார்த்தபிறகு தான் இது விற்பனைக்கு வரும்.

Related Stories: