சூரியனின் மேற்பரப்பு

நன்றி குங்குமம் முத்தாரம்

உலகளாவிய அறிவியல் பத்திரிகை களில் சமீபத்தில் எடுக்கப்பட்ட சூரியனின் மேற்பரப்பு புகைப்படம் தான் ஹாட் டாக். கடல் மட்டத்திலிருந்து 3 ஆயிரம் மீட்டர் உயரத்திலிருந்து, உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி வழியாக சூரியனின் மேற்பரப்பைப் புகைப்படமாக்கியவர் டேனியல்.

ஹவாய் தீவிலுள்ள ஒரு எரிமலையின் உச்சியில் அமர்ந்துகொண்டு இதைச் சாதித்திருக்கிறார் டேனியல். இவ்வளவு ரெசல்யூசனுடன் யாரும் சூரியனை இதுவரை புகைப்படமாக்கவில்லை. இந்தப் புகைப்படம் வருங்காலத்தில் பூமிக்கும் சூரியனுக்கும் இடையிலான ஆய்வுகள் மேற்கொள்ள அடித்தளமாக இருக்கப்போகிறது.

Related Stories: