ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கருணை மனு அனுப்பினார் நிர்பயா வழக்கில் தூக்குதண்டனை குற்றவாளி வினய் சர்மா

டெல்லி: நிர்பயா வழக்கில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி வினய் சர்மா ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு இன்று கருணை மனு அனுப்பியுள்ளார். டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த வழக்கில் முகேஷ் குமார் சிங், பவன் குமார் குப்தா, விஜய் குமார் சர்மா மற்றும் அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. 4 குற்றவாளிகளுக்கும் பிப்ரவரி 1-ம் தேதி தண்டனையை நிறைவேற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், குற்றவாளிகளில் ஒருவரான வினய் சர்மா தனது தண்டனையை ரத்து செய்யக்கோரி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு இன்று கருணை மனு அனுப்பியுள்ளார் என அவரது வழக்கறிஞர் ஏ.பி.சிங் தெரிவித்துள்ளார். ஏற்கனவே, குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் குமார் சிங் அனுப்பிய கருணை மனுவை ஜனாதிபதி நிராகரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: