பிரதமர் மற்றும் நிதியமைச்சருக்கு அடுத்து என்ன செய்வது என்று ஒன்றும் தெரியவில்லை: ராகுல் காந்தி விமர்சனம்

டெல்லி: பிப்.1ம் தேதி மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் பிரதமர் மற்றும் நிதியமைச்சருக்கு அடுத்து என்ன செய்வது என்று ஒன்றும் தெரியவில்லை என ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மத்திய அரசு பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய இன்னும் சில தினங்களே உள்ளன. 2020-21 ஆம் நிதியாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை பிப்ரவரி 1 ஆம் தேதி நிதியமைச்சர் சீதாராமன் தாக்கல் செய்ய உள்ளார். இந்நிலையில், மத்திய அரசை காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சனம் செய்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; முன்பு நாட்டின் பொருளாதார நிலையில், மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.5 சதவீதமாகவும், பணவீக்கம் 3.5 சதவீதமாகவும் இருந்தது. ஆனால், தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தி 3.5 சதவீதமாகவும், பணவீக்கம் 7.5 சதவீதமாகவும் உள்ளது. பிரதமர் மோடி மற்றும் அவரது பொருளாதார நிபுண ஆலோசகர்கள் இணைந்து நாட்டின் பொருளாதாரத்தைப் புரட்டிப்போட்டுவிட்டனர். பிரதமர் மற்றும் நிதியமைச்சருக்கு அடுத்து என்ன செய்வது என்று ஒன்றும் தெரியவில்லை என்று ராகுல் காந்தி கூறினார்.

மேலும் நேற்று அவர் கூறுைகயில்; உலகளவில் இந்தியாவின் மீதான மதிப்பை பிரதமர் மோடி குலைத்துவிட்டார். நாடு முழுவதும் தற்போது வேலையின்மை பிரச்னை அதிகரித்து காணப்படுகிறது. ஆனால், அதுகுறித்து பிரதமர் மோடி இதுவரை எதுவும் பேசவில்லை, நடவடிக்கையும் எடுக்கவில்லை’ என்று கூறியுள்ளார்.

Related Stories: