தமிழகத்தை உலுக்கிய குரூப்-4 முறைகேடு: தலைமை செயலகத்தில் டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளுடன் அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை

சென்னை: குரூப்-4 முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளுடன் அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனை நடத்தி வருகிறார்.

குரூப் 4 முறைகேடு:

சென்னை: டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு  நடத்திய குரூப் 4 தேர்வில் மோசடி நடந்தது தெரியவந்தது. இது தொடர்பாக 99 தேர்வர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்  பின்னணியில்  விஐபி தரகர்கள் மற்றும் உயரதிகாரிகள் ஈடுபட்டது உறுதியானது. இதையடுத்து வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் நடத்திய விசாரணையில், இந்த முறைகேட்டில் இடைத்தரகராக  செயல்பட்ட சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த பள்ளிக்கல்வித் துறை அலுவலக உதவியாளர் ரமேஷ் (39), எரிசக்தி துறை அலுவலக உதவியாளர் மாமல்லபுரம் திருக்குமரன் (35), தேர்வில் மோசடியாக வெற்றி பெற்ற திருவல்லிக்கேணி  நிதீஷ்குமார் (21), ஆவடி வெங்கட்ரமணன் (38),

திருவாடனை கோடனூர் கிராமத்தை சேர்ந்த வேல்முருகன் (31), பண்டிருட்டி சிறு கிராமத்தை சேர்ந்த ராஜசேகர் (26), ஆவடி கவுரிபேட்டை காலேஷா (29), டிஎன்பிஎஸ்சி ரெக்கார்டு கிளார்க் பழைய வண்ணாரப்பேட்டை ஓம் காந்தன் (45), தேனி  சீலையம்பட்டி பாலசுந்தர்ராஜ் (45) கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள சிறு கிராமம் பகுதியை சேர்ந்த சீனுவாசன்(33) டலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்த்த சிவராஜ் என மொத்தம் 13 பேரை சிபிசிஐடி போலீசார் அதிரடியாக கைது  செய்தனர். இவர்கள் தமிழகம் முழுவதும் நெட்வொர்க் வைத்து டிஎன்பிஎஸ்சி தேர்வில் முறைகேட்டில் பல ஆண்டுகளாக செய்து வந்தது தெரியவந்தது.

பணியிடை நீக்கம்:

இந்த முறைகேட்டில் கைது செய்யப்பட்டுள்ள திருவல்லிக்கேனியை சேர்ந்த ரமேஷ் (39), பள்ளிக்கல்வித் துறை வளாகத்தில் செயல்பட்டு வரும், தனியார் பள்ளிகளை நிர்வகிக்கும் நிர்ணய கமிட்டியில் பணியாற்றியவர். அதே வளாகத்தில்   செயல்பட்டு  வரும் எரிசக்தி துறை அலுவலக உதவியாளர் மாமல்லபுரத்தை சேர்ந்த திருக்குமரன் (35) ஆகிய இருவரையும் பள்ளி கல்வித்துறை இயக்ககம் நேற்று காலை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது.

சிபிஐ விசாரணைக்கு கோரிக்கை:

இதற்கிடையே, குரூப் 4 முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முகமது ரஸ்வி என்பவர் முறையீடு செய்துள்ளார். மேலும் உயர்நீதிமன்ற நீதிபதி கண்காணிப்பில் விசாரணை நடைபெற வேண்டும்  எனவும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் விரைவில் விசாரிக்கப்படும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

அமைச்சர் ஆலோசனை:

இந்நிலையில், குரூப் 4 முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி அதிகாரிகளுடன் சென்னை தலைமை செயலகத்தில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Related Stories: