ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்துக்கு 1,000 கோடி கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் : ராமதாஸ் அறிக்கை

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ்  வெளியிட்ட அறிக்கை:மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்காக மத்திய அரசு ஒதுக்கீடு செய்த நிதி செலவழிக்கப்பட்டு விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் இதுவரை 300 கோடி வரை ஊதியம் வழங்குவது நிலுவையில் உள்ளதாக செய்திகள் வெளியானது ஊரகப் பொருளாதாரம் குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாநிலங்களை பொறுத்தவரை 2,000 கோடிக்கும் கூடுதலாக ஊதிய நிலுவை வழங்க வேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 300 கோடி வரை ஊதிய நிலுவை வழங்கப்பட வேண்டியிருக்கிறது.

2018-19ம் ஆண்டில் இத்திட்டத்திற்காக மொத்தம் 61,084 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், அந்நிதியும் போதாத நிலையில், பல ஆயிரம் கோடி ரூபாய் நிலுவை வைக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு கடந்த ஆண்ைட விட குறைவாக ₹60,000 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் வேளாண் பணிகள் நிறைவடைந்து விட்டன. அடுத்த இரு மாதங்களுக்கு வேளாண் தொழிலாளர்களுக்கு வேலை கிடைக்காது என்ற சூழலில், அவர்களுக்கு ஊரக வேலை உறுதித் திட்டம் மூலம் வேலை வழங்க வேண்டுய கட்டாயம் உள்ளது.  மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கங்களில் ஒன்று ஊரகப் பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவது தான். நாட்டின் வளர்ச்சியையும், ஊரக மக்களின் வேலைவாய்ப்பையும் கருத்தில் கொண்டு கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழகத்திற்கு மட்டும் 1,000 கோடி கூடுதலாக ஒதுக்க வேண்டும்.

Related Stories: