மத்திய அரசின் கட்டுப்பாட்டில் தமிழகம் : திருமாவளவன் குற்றச்சாட்டு

சென்னை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பங்கேற்றார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: காஞ்சிபுரம் மாவட்டத்தில் பெரியார் சிலை உடைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பாமகவை சேர்ந்த ஒருவர் உட்பட 3 பேர் கைது செய்துள்ளதாக கிடைத்த தகவல் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாடு அரசு இதை வேடிக்கை பார்க்கக்கூடாது. அம்பேத்கர், பெரியார் போன்றவர்களின் சிலைகளை அவமதிப்பதும், உடைப்பதும்,  சங்பரிவார் அமைப்புகளின் வன்முறை பேச்சுக்களால் தொடர்ந்து அரங்கேறுகின்றன. இதனை தடுக்க தனிப்படை அமைக்க வேண்டும்.

தமிழக அரசு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கக் கூடிய ஒன்றாக மாறியுள்ளது. சுதந்திரமாக சிந்திப்பதற்கோ செயல்படுத்துவதற்கோ இயலாத நிலையில் அது சிக்கிக் கிடக்கிறது. அதனால்தான் மத்திய அரசு தமிழக அரசைப் பாராட்டி விருது வழங்கி சிறப்பித்தது. ஆனால், உள்ளபடியே மத்திய அரசுக்கு கட்டுப்பட்டு நடக்கக்கூடிய அரசாக இருப்பது என்பதுதான் நிதர்சமான உண்மை. பாஜ, தமிழக அரசின் நடவடிக்கைகளில் தலையிடுகிறது. இவ்வாறு கூறினார்.

Related Stories: