சென்னை: தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.56 குறைந்தது. தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து அதிகரித்து வந்தது. கடந்த 8ம் தேதி ஒரு சவரன் ரூ.31,176 என்று விற்பனையானது. இது தங்கம் விலை வரலாற்றில் அதிகப்பட்ச விலை என்ற சாதனையை படைத்தது. அதன் பிறகு தங்கம் விலை ஏறுவதும் இறங்குவதுமான போக்கு காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 25ம் தேதி தங்கம் விலை திடீரென சவரனுக்கு ரூ.304 அதிகரித்து ஒரு சவரன் ரூ.30,896க்கு விற்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சனிக்கிழமை விலையிலேயே அன்றைய தினம் தங்கம் விற்பனையானது.