கோட் சூட் அணிந்த குதிரை!

நன்றி குங்குமம் முத்தாரம்

நாய், பூனை என நம் செல்லப் பிராணிகளுக்கு சட்டை தைத்து போட்டிருப்பதைப் பார்த்திருப்போம். ஆனால், இது கொஞ்சம் வித்தியாசமானது. ஆம்; ஒரு பந்தயக்குதிரைக்கு விலையுயர்ந்த கோட் சூட் தைத்து அசத்தியிருக்கின்றனர். ‘‘எதுவும் திட்டமிட்டு நடக்கலை. ஏதாவது வித்தியாசமாக செய்யணும்னு  நினைச்சேன். அதோட விளைவுதான்இந்த கோட் சூட்!’’ என் கிறார்ஆடை வடிவமைப்பாளரான எம்மா சாண்டாம் கிங். பந்தயக் குதிரைக்கான கோட் சூட்டை வடிவமைத்ததும் தைத்ததும் இவரது குழுதான்.

இரவு பகல் பார்க்கா மல் மொத்தம் 4 வார உழைப்பு தேவைப்பட்டிருக்கிறது. சராசரி மனிதருக்குத் தைப்பதை விட 10 மடங்கு அதிக துணி வேறு.  குதிரைக்குப் பொருத்தமான அளவை எடுக்கவே பெரும்பாடு ஆகிவிட்டதாம். ஆனாலும் கொஞ்சமும் அசராமல் கையில் எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்திருக்கிறார் எம்மா.

‘‘என்னோட வாழ்க்கையில் நான் செய்த மிக சவாலான வேலை இதுதான். பல பந்தயங்களில் வென்ற மோர்ஸ்டீட் எனும் சாம்பியன் ரேஸ் குதிரைக்குத்தான் இந்த கோட் - சூட்டைத் தைத்திருக்கிறோம். இது 3 பகுதிகளால் ஆனது. இதுவரை ஒரு குதிரைக்கு 3 பீஸ் சூட் தைக்கப்பட்டதில்லை. இதனோடு டை ஒன்றும் தொப்பி ஒன்றும் இந்த மோர்ஸ்டீடுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளது.

எங்க ளுக்கு மோர்ஸ்டீட் ரொம்பவே ஒத்துழைப்பு கொடுத்தான். அவன் மிக சாதுவான விலங்கு...!’’ என்கிறார் எம்மா.இந்த சூட் அணிந்தபடி மோர்ஸ்டீடும், இதேபோன்ற கோட்-சூட் அணிந்து இதன் ஜாக்கி சர் டோனி மெக்காயும் ஒன்றாகப் போஸ் கொடுத்தது தான் இதில் ஹைலைட்.

Related Stories: