மூளையைப் பாதிக்கும் கார்பன் - டை - ஆக்சைடு

நன்றி குங்குமம் முத்தாரம்

கார்பன் - டை - ஆக்சைடு நம் சூழலை மட்டும் பாதிப்பதில்லை. இப்போது வீடு, அலுவலகம், பள்ளி என எல்லா இடங்களிலும் நிறைய ஆரம்பித்துவிட்டது கார்பன் - டை- ஆக்சைடு.2100-ம் வருடத்தில்  இப்போதிருப்பதைவிட இரண்டு மடங்கு அதிகமாக கார்பன் - டை- ஆக்சைடு காற்றில் கலந்திருக்கும். சமீபத்தில் கார்பன் - டை -ஆக்சைடு அதிகமாக உள்ள ஒரு அலுவலகத்துக்குள் 24 பேரை ஆறு நாட்கள் தங்கவைத்து ஆய்வு செய்யப்பட்டிருக்கிறது.

கார்பன் - டை- ஆக்சைடு நேரடியாக மூளையைத் தாக்கி நம் சிந்திக்கும் திறனை மழுங்கச் செய்யும் ஆற்றல் வாய்ந்தது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதாவது நம்முடைய முட்டாள்தனங்களுக்கு கார்பன் - டை - ஆக்சைடும் ஒரு காரணம். அதனால் நாம் இருக்கும் இடங்களில் கார்பன் - டை- ஆக்சைடின் அளவை கண்காணித்து அதைக் கட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும்.

Related Stories: