மறதியை மறக்கடிக்கும் காபி

நன்றி குங்குமம் முத்தாரம்

ஒரு காலத்தில் திரைப்படங்களில் மட்டுமே பார்த்த ஒரு நோய் அல்சைமர் என்கிற மறதி நோய். இன்று அந்த  மறதி நோய்  வயதானவர்களை பாடாய் படுத்திக்கொண்டிருக்கிறது. இதுவரைக்கும் இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த எந்த மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. அத்துடன் இந்த நோய் எதனால் வருகிறது என்பதற்கு திட்டவட்டமான காரணமும் மருத்துவத்திடம் இல்லை.

அதனால் மனிதகுலத்துக்கு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது அல்சைமர். இந்த நிலையில் ‘‘‘தினமும் ஐந்து கப் காபி குடியுங்கள். அல்சைமரின் ஆபத்திலிருந்து ஓரளவுக்கு உங்களைக் காப்பாற்றுகிற திறன் காபிக்கு இருக்கிறது...’’ என்கிறார் மருத்துவர் எலிசபெத் ரோதன்பெர்க். தவிர, இந்த நோயின் அறிகுறிகளிலிருந்தும் உங்களை காபி காப்பாற்றுகிறதாம்.

Related Stories: