சென்னை: இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளிடையே டிச. 15ம் தேதி சென்னையில் நடைபெற உள்ள முதல் ஒருநாள் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை தொடங்குகிறது. சென்னை, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் அரங்கில் நடைபெற உள்ள இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை நாளை ஞாயிற்றுக்கிழமை தொடங்கும் என்று தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) நேற்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது. ரசிகர்கள் காலை 10.30 மணி முதல் சேப்பாக்கம் விக்டோரியா விடுதி சாலையில் உள்ள டிஎன்சிஏ அலுவலக பூத்களில் டிக்கெட்களை வாங்கலாம். குறைந்தபட்ச விலை 1200. இது தவிர 2400, விருந்தினர் தளங்களுக்கு 4000, 4800, 6500, 8000, 12,000 விலைகளிலும் டிக்கெட் விற்கப்பட உள்ளன.