அகமதாபாத்: உலகில் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமாக ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் கிரிக்கெட் மைதானம் உள்ளது. இம்மைதானத்தில் 90 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்க கூடிய வசதி உள்ளது. இதைவிட பெரிய மற்றும் விசாலமான மைதானம், குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. இந்த புதிய மைதானத்தில் 1.10 லட்சம் பேர் அமர்ந்து பார்க்க முடியும். சுமார் 63 ஏக்கர் பரப்பளவில் 700 கோடி ரூபாய் செலவில் அகமதாபாத்தின் மொட்டேரா பகுதியில் கட்டப்பட்டு வருகிறது. இந்த மைதானத்தின் பணிகள் தற்போது முடியும் தருவாயில் உள்ளன. அடுத்தாண்டு திறப்பு விழா காணவுள்ளதால், இதன் கட்டுமான பணி முடிவுக்கு வரவுள்ளது.