எட்டாவது அதிசயம்

நன்றி குங்குமம் முத்தாரம்

பொதுவாக எட்டாவது அதிசயம் என்ற சொல்லை அடிக்கடி கேட்கிறோம். உலகின் ஏழு அதிசயங்களுக்கு இணை யான கட்டங்களுக்கு, புராஜெக்ட்டுகளுக்கு, டிசைன் களுக்கு கொடுக்கப்படுகிற ஒரு பட்டம்தான் இந்த எட்டாவது அதிசயம்.

ஆனால், இது அதிகார பூர்வமற்ற ஒரு பட்டம். உதாரணத்துக்கு பர்னே நீர்வீழ்ச்சி, வர்ஜீனியாவில் உள்ள இயற்கை பாலம், நயாகரா நீர்வீழ்ச்சி போன்ற இடங்கள் கூட எட்டாவது அதிசயம் என்று அழைக் கப்படுகின்றன.

இடங்கள் மட்டுமல்லாது மனிதர்களும் இதில் இடம்பெற்றிருக்கின்றனர் என்பது ஆச்சர்யம். உலகப்புகழ் பெற்ற மல்யுத்த வீர ஆந்த்ரே தி ஜெயண்ட் எட்டாவது அதிசயமாக புகழப்பட்டார். காரணம், அவரின் எடை 236 கிலோ, உயரம் 7 அடி 4 அங்குலம். இதுபோக ‘கிங்காங்’ கதாபாத்திரமான ராட்சத சிம்பன்ஸியும் எட்டாவது அதிசயமாகக் கருதப்படுகிறது.

Related Stories: