விண்வெளியில் குப்பை கொட்டிய விண்வெளிவீரர்!

நாசா இன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விண்வெளியில் குப்பையை கொட்டும் விண்வெளி வீரரின் வீடியோவை பகிர்ந்து, நெட்ஃபிக்ஸ்-ன் சுகாதார பிரபலமான மேரி கொண்டாவின் தாரகமந்திரத்தை ஒளிபரப்பியுள்ளது. கடந்த வாரம் சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஆல்பா மேக்னடிக் ஸ்பெக்ட்ரோமீட்டரை (ஏஎம்எஸ்) சரிசெய்யும் போது, விண்வெளி வீரரான லூகா பர்மிடானோ அகற்றிய உபயோகமில்லாத கவசத்தை விண்வெளியில் வீசுவதை அந்த வீடியோ காண்பிக்கிறது.   

இந்த உபயோகமில்லாத கவசம் மகிழ்ச்சியை தூண்டியதா? சில நேரங்களில் நீங்கள் இனிமேலும் உங்களுக்கு பயன்படாதவற்றை இப்படி விட்டுவிட வேண்டும் என்று அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா தான பகிர்ந்துள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளது. பர்மிட்டானோ அந்த கவசத்தை அப்படியே விண்வெளியில் விட்டுவிட்ட நிலையில், அது விண்கலத்தில் இருந்து அழகாக மிதந்தது கொண்டிருக்கிறது. அது இறுதியில் மேல் வளிமண்டலத்தில் சிதைந்துவிடும். 

Related Stories: