கோவை ஏர்போர்ட்டில் 1.6 கிலோ தங்கத்துடன் 2 பேர் சிக்கினர்

கோவை:  கோவை விமான நிலையத்திற்கு நேற்று மாலை 6 மணியளவில் சவூதி அரேபியாவிலிருந்து ஏர் அரேபியா விமானம் வந்தது. இதில்  பயணி ஒருவரின் நடையில் சந்தேகமடைந்த மத்திய கலால் வரித்துறை அதிகாரிகள் விசாரித்தனர். முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறவே ஸ்கேனர் பகுதிக்கு அழைத்து சென்று உடலை ஸ்கேன் செய்தனர். அவரது ஆசன வாய் பகுதியில் தங்கம் இருப்பது தெரியவந்தது.  அவர் பெங்களூர் அருகே சிக்மங்களூர் பகுதியை சேர்ந்த ஜாபர் (27) என்பதும், சவூதி அரேபியாவிலிருந்து  1.3 கிலோ தங்கத்தை பொடியாக்கி, ஐந்து பிளாஸ்டிக் கவர்களில் போட்டு ஆசன வாய்க்குள் செருகி, வெளியே விழாமல் இருக்க வேதிப்பொருளை ஆசனவாய் பகுதியில் பூசி நூதனமாக கடத்தியது தெரியவந்தது. அதேபோல அந்த விமானத்தில் வந்த திருச்சியை சேர்ந்த ஹக்கிம்(30) என்பவர், செருப்பிற்குள் 300 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததும் தெரியவந்தது. இவர்களிடமிருந்து 1.6 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Stories: