குளித்தலையில் நடமாடும் கழிப்பறை வசதி: நகராட்சி ஏற்பாடு

குளித்தலை: கரூர் மாவட்டம் குளித்தலை நகராட்சி வாய்க்கால் மேடு புதுக்கோர்ட் தெருவில் பொது கழிப்பிடம் கட்டித்தர கோரி மார்க்சிஸ்ட் ஒன்றிய குழு சார்பில் நாளை(19ம் தேதி) ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர். இது தொடர்பாக குளித்தலை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் மகாமுனி தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் நகராட்சி சுகாதார ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஸ்டாலின் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

இதில் போராட்டக் குழுவின் சார்பில் குளித்தலை நகராட்சிக்குட்பட்ட 7வது வார்டு மற்றும் 9வது வார்டு வாய்க்கால் மேடு புது கோர்ட்தெருவில் வசிக்கும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பொதுக் கழிப்பிடம் கட்டித்தர வேண்டும்

என தெரிவித்தனர். இதனை தொடர்ந்து வாய்க்கால் மேடு, புது கோர்ட் தெருவில் பொதுக்கழிப்பிடம் அமைப்பது தொடர்பாக நகராட்சி ஆணையர் தலைமையில் ஒரு வார காலத்தில் ஆய்வு செய்து பொதுக்கழிப்பிடம் அமைப்பது குறித்து நடவடிக்கை எடுப்பதாகவும்,

கழிப்பிடம் கட்டுவதற்கு தேவையான அரசு புறம்போக்கு இடம் கிடைக்காத பட்சத்தில் 2 நடமாடும கழிப்பறைகள் அமைப்பது என்றும், அதுவரை தற்காலிகமாக புதுக்கோட்டை தெருவில் பயணியர் விடுதி எதிர்புறம் உள்ள பொது கழிப்பிடத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவித்தனர். எனவே நாளை நடைபெற இருந்த ஆர்ப்பாட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

Related Stories: