டெல்லியில் நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது: 27 மசோதாக்களை தாக்கல் செய்த மத்திய அரசு திட்டம்

டெல்லி: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது. இதை முன்னிட்டு, அவையை சுமூகமாக நடத்துவது தொடர்பாக எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நேற்றும், நேற்று முன்தினமும் கூட்டப்பட்டது. மக்களவை சபாநாயகர் ஓம்  பிர்லா நேற்று முன்தினம் கூட்டிய கூட்டத்தில் பிரதமர் மோடியும் கலந்து கொண்டார். அவையை சுமூகமாக நடத்த ஒத்துழைப்பு தரும்படி அவர் கேட்டுக் கொண்டார். தொடர்ந்து, நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷியும்  அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு நேற்று அழைப்பு விடுத்திருந்தார். இதில் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம் நபி ஆசாத், மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி,  திரிணாமுல் சார்பில் தெரிக் ஓ பிரைன் உட்பட 27 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், ‘‘அவை விதிமுறைகளின்படி அனைத்து விஷயங்களை பற்றியும் விவாதிக்க அரசு தயாராக இருக்கிறது. கடந்த கூட்டத் தொடரை போல், இந்த கூட்டத் தொடரும் பயனுள்ளதாக இருக்க   வேண்டும்’’ என்றார். இந்த கூட்டத்துக்குப்பின் பிரதமர் மோடி டிவிட்டரில் வெளியிட்ட தகவலில், ‘நாடாளுமன்ற கூட்டம் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என நாங்கள் எதிர்பார்க்கிறோம். இதில் மக்கள் மற்றும் வளர்ச்சி தொடர்பான விஷயங்கள்  ஆலோசிக்கப்படும்,’  என்றார். வரும் 26ம் தேதி அரசியல் சாசன தினம் கொண்டாப்பட உள்ளது. இதை முன்னிட்டு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறப்பு கூட்டு கூட்டத்தை கூட்ட திட்டமிடப்பட்டுள்ளது. குளிர்கால கூட்டம் அடுத்த  மாதம் 13ம் தேதி முடிவடையும் என்றார்.

இந்தக் கூட்டத்தொடரில் மொத்தம் 27 மசோதாக்கள் மற்றும் சட்டத்திருத்த மசோதாக்களை தாக்கல் செய்து ஒப்புதல் பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதில், வரிகள் சட்ட திருத்த மசோதா, பல மாநிலங்களில் இயங்கும் கூட்டுறவு   சொசைட்டிகள் ஒழுங்கு மசோதா, கம்பெனி சட்ட இரண்டாவது சட்ட திருத்த மசோதா, குடிமக்கள் சட்ட திருத்த மசோதா, தனி தகவல்கள் பாதுகாப்பு மசோதா, விமானங்கள் சட்ட திருத்த மசோதா உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

பிரதமர் மோடி பேட்டி:

நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேட்டியளித்த பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்ற கூட்டத்தொடரில் எதிர்க்கட்சியினர் ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும் என வேண்டுக்கோள் விடுத்தார்.  இது 2019-ம் ஆண்டின் கடைசி நாடாளுமன்ற கூட்டமாகும். இது மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது மாநிலங்களவையின் 250-வது நாடாளுமன்ற கூட்டத்தொடர் என்றார். இந்த அமர்வின் போது, வரும் 26-ம் தேதி, அரசியலமைப்பு தினம்.  நமது அரசியலமைப்பு அதன் 70 ஆண்டை நிறைவு செய்ய போதுவதை கடைப்பிடிப்போம் என்றும் கூறினார்.

Related Stories: