விஷமாகும் தீவு

நன்றி குங்குமம் முத்தாரம்

ரம்மியமான சூரியோதயம், அழகான சூரியன் மறைவு, மனதை புத்துணர்வாக்கும் கடல், பிரமிக்க வைக்க மணல் என இயற்கையின் அதிசயமாகத் திகழும் தீவுகள் கோடிலூப் மற்றும் மார்ட்டினிக். கரீபியன் கடலில் வீற்றிருக்கும் இந்தத் தீவுகள் பிரான்ஸின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. சுற்றுலாவின் மூலம் கிடைக்கும் வருமானத்தைத் தவிர்த்து வாழைப்பழ விவசாயமும் இங்கே ஜோராக அரங்கேறுகிறது.

தவிர, பல நாடுகளுக்கு இங்கிருந்து வாழைப்பழம் ஏற்றுமதியாகிறது. வாழைப்பழ விளைச்சலை அதிகமாக்கும் பொருட்டு பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்த, இப்போது தீவே விஷமாகி வருகிறது. ஆம்; அங்கே வாழும் 70 சதவீத மனிதர்களின் ரத்தத்தில் பூச்சிக்கொல்லி மருந்தின் விஷம் கலந்துள்ளது. சுற்றுச்சூழலும் பாதிப்படைந்துவிட்டது. சுற்றுலாப்பயணிகளும் உஷாராகிவிட்டனர். தீவை மீட்டெடுக்க பிரான்ஸ் அரசு களமிறங்கியுள்ளது.

Related Stories: