உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட பாஜவில் விருப்ப மனு வினியோகம் தொடங்கியது: நடிகை கவுதமி பரபரப்பு பேட்டி

சென்னை,: தமிழக பாஜக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து நவம்பர் 16ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் வாங்கப்படும் என்று கட்சி தலைமை அறிவித்தது. சென்னை தி.நகரில் உள்ள பாஜக  தலைமை அலுவலகத்தில் நடந்த விருப்ப மனு வினியோகத்தை முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணஜ், நடிகை கவுதமி, துணை தலைவர் எம்.என்.ராஜா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் ஏராளமானோர் போட்டியிட  விருப்ப மனுக்களை அளித்தனர். சென்னை மேயர் பதவிக்கு மாநில இளைஞர் அணி தலைவர் வினோஜ் பி.செல்வம் போட்டியிட கோரி இளைஞர் அணியை சேர்ந்த 10க்கும் மேற்பட்டவர்கள் போட்டி போட்டு விருப்பமனுக்களை தாக்கல்  செய்தனர். இதே போல சென்னை கோட்ட பொறுப்பாளர் சக்ரவர்த்தி போட்டியிட கோரி 5 பேரும் விருப்ப மனுக்களை அளித்தனர். இதே போல அதிக அளவில் இளைஞர் போட்டியிட கோரி விருப்ப மனுக்களை அளித்தனர்.

தொடர்ந்து நடிகை கவுதமியிடம் நிருபர்கள் உள்ளாட்சி தேர்தலில் நீங்கள் போட்டியிடுவீர்களா என்று கேட்டனர். அதற்கு கவுதமி, “ என்வாழ்க்கையில் இதுவரை எதற்கும் தயங்கினது இல்லை. இன்று விருப்ப மனு வினியோகம்  தொடங்கியுள்ளது. வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்த போட்டிக்கு வந்துள்ளனர். அவர்கள் வெற்றி  பெற மனதார வாழ்த்துகிறேன்” என்றார்.மாநகராட்சி மேயர் பதவிக்கு போட்டியிட ரூ.10,000, மாநகராட்சி வார்டு உறுப்பினர் ரூ.2500,  நகராட்சி தலைவர் ரூ.5000, நகராட்சி வார்டு உறுப்பினர் ரூ.1000, பேரூராட்சி தலைவர் ரூ.2500, பேரூராட்சி வார்டு உறுப்பினர் ரூ.500, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் ரூ.2500, ஒன்றியக்குழு உறுப்பிருக்கு ரூ.500 என்று விருப்பமனு கட்டணமாக  நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Stories: