ஹாங்காங் ஓபன் பேட்மின்டன் அரை இறுதியில் கிடாம்பி ஸ்ரீகாந்த்

ஹாங்காங்: பி.டபுள்யு.எப் உலக டூர் சூப்பர் 500 அந்தஸ்து பெற்ற ஹாங்காங் ஓபன் பேட்மின்டன் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதியில் விளையாட, இந்திய வீரர் கிடாம்பி ஸ்ரீகாந்த் தகுதி பெற்றார். கால் இறுதியில் சீனாவின் சென் லாங்குடன் நேற்று மோதிய கிடாம்பி 21-13 என்ற கணக்கில் முதல் செட்டை கைப்பற்றி முன்னிலை பெற்றார். இந்த செட் 15 நிமிடத்தில் முடிவுக்கு வந்தது. இந்த நிலையில், காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகுவதாக சென் லாங் அறிவித்தார். இதைத் தொடர்ந்து கிடாம்பி அரை இறுதிக்கு முன்னேறினார்.

இருவரும் நேருக்கு நேர் மோதியுள்ள 8 போட்டிகளில், கிடாம்பி பெற்ற 2வது வெற்றி இது. முன்னதாக, 2017 ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் அவர் 22-20, 21-16 என்ற நேர் செட்களில் சென் லாங்கை வீழ்த்தியிருந்தார். நம்பிக்கை நட்சத்திரங்கள் பி.வி.சிந்து, சாய்னா நெஹ்வால், எச்.எஸ்.பிரனாய் உட்பட முன்னணி வீரர், வீராங்கனைகள் வெளியேறிய நிலையில், ஹாங்காங் ஓபனில் கிடாம்பி மட்டுமே பதக்க வாய்ப்புடன் களத்தில் எஞ்சியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: