லைம்ஸ்டோன் கோபுரங்கள்

வருடத்துக்கு சுமார் மூன்று லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்துபோகிற ஓர் இடம் பினாக்கிள்ஸ் பாலைவனம். கடல் மட்டத்திலிருந்து 60 மீட்டர் உயரத்தில், 190 ஹெக்டேர் பரப்பளவில் விரிந்துகிடக்கும் இந்த இடம் மேற்கு ஆஸ்திரேலியாவில் உள்ளது. 30 ஆயிரம் வருடங்களுக்கு முன் உருவான இந்தப் பாலைவனம் ஆயிரக்கணக்கான லைம்ஸ்டோன் கோபுரங்களால் அழகாக காட்சியளிக்கிறது.

ஐம்பது வருடங்களுக்கு முன்பு தான் இப்படியொரு இடம் இருப்பதாகவே கண்டுபிடிக்கப்பட்டது. ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரைக்குள் இங்கே விசிட் அடித்தால் காட்டுப்பூக்களைப் பார்க்கலாம்; வசந்த காலம் ஆரம்பிப்பதை ரசிக்கலாம்.

Related Stories: