தீபாவளி ஆஸ்தானத்தை முன்னிட்டு திருப்பதியில் 27ம் தேதிஆர்ஜித சேவைகள் ரத்து

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருகிற 27ம் தேதி தீபாவளி ஆஸ்தானம் நடக்கிறது. அன்று அதிகாலை 2.30 மணியில் இருந்து 3.30 மணிவரை சுப்ரபாத சேவை நடக்கிறது. தொடர்ந்து தோமால சேவை, அர்ச்சனை, நெய்வேத்தியம் ஆகியவை ஏகாந்தமாக நடக்கிறது. நெய்வேத்தியம் செய்த பொருட்கள் தேவஸ்தான அதிகாரிகளுக்கும், பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து காலை 7 மணியில் இருந்து 9 மணிவரை தங்க வாசல் அருகில் கண்டா மண்டபத்தில் உற்சவர் ஸ்ரீதேவி, பூதேவி, சமேத மலையப்பசுவாமி சர்வ பூபால வாகனத்திலும், உற்சவர் சேனாதிபதி விஸ்வசேனர் தங்க திருச்சி வாகனத்திலும் எழுந்தருள செய்து தீபாவளி ஆஸ்தானம் நடக்கிறது.

 

தீபாவளி ஆஸ்தானத்தையொட்டி அன்றைய தினம் கோயிலில் நடக்க இருந்த ஆர்ஜித சேவைகளான  ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரமோற்சவம், வசந்த உற்சவம் ஆகியவை ரத்து செய்யப்படுகிறது. அன்று மாலை சகஸ்ர தீபலங்கார சேவை மட்டும் வழக்கம்போல் நடக்கிறது என்று தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: