தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனி, தருமபுரி, சேலம், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச்சலனத்தால் தமிழகம் முழுவதும் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

அக்டோபர் 1 முதல் 18-ம் தேதி வரை தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய 9 செ.மீ. மழையில் இதுவரை 8 செ.மீ. மழை கிடைத்துள்ளது என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு அரபிக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் வெப்பச் சலனத்தால் தமிழகத்தின் அநேக இடங்களில் 21,22ம் தேதிகளில் கனமழைக்கு பெய்ய வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அயனாவரத்தில் 13 செ.மீ. மழை

கடந்த 24 மணி நேரத்தில் சென்னை அயனாவரத்தில் 13 செ.மீ. மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை பெரம்பூரில் 12 செ.மீ., டிஜிபி அலுவலகம் 9 செ.மீ., நீலகிரி மாவட்டம் குன்னூரில் 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதே போல் பொள்ளாச்சியில் 7 செ.மீ., சென்னை அம்பத்தூரில் 6 செ.மீ., தேவாலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதால் லட்சத்தீவு, மாலத்தீவு மற்றும் கேரள கடலுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Related Stories: