சிரியாவில் குர்துக்களுக்கு ஆதரவாகப் போரிட படை வீரர்களை அனுப்பிய ரஷ்யா

டமாஸ்கஸ் : சிரியாவில் குர்துக்கள் மீதான துருக்கியின் தாக்குதலைத் தடுக்கும் பொருட்டு, ரஷ்யா தனது படை வீரர்களை களத்தில் இறக்கியுள்ளது.தனி நாடு கேட்கும் குர்து இன மக்கள், எல்லையில் இருப்பது தங்கள் நாட்டுக்கு ஆபத்து என துருக்கி அதிபர் தயீப் எர்டோகன் கருதுகிறார். குர்து இனப் போராளிகளை ஒழித்துக் கட்ட தக்க சமயம் பார்த்து கொண்டிருந்த வேளையில், சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராகப் போரிடும் வீரர்களை அமெரிக்கா திரும்ப அழைத்து கொண்டதை பயன்படுத்தி கொண்டு குர்துக்கள் மீது தாக்குதல் நடத்த எர்டோகன் உத்தரவிட்டார்.

இதை அடுத்து சிரியாவின் வடக்கே உள்ள குர்துக்கள் மீது துருக்கி ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. சிரியாவின் வடக்குப் பகுதியில் குர்து படையினர் மீது துருக்கி 8-வது நாளாகத் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதன் காரணமாக துருக்கி - சிரியா எல்லையில் வசிக்கும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட குர்து இன மக்கள், தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். அமெரிக்கா, தனது படைகளை வாபஸ் பெற்றதை அடுத்து, இந்த தாக்குதல் நடைபெற்று வருகிறது.இந்த நிலையில், அமெரிக்கா இல்லாத வெற்றிடத்தை நிரப்புவதற்காக ரஷ்யா களத்தில் இறங்கியுள்ளது. குர்துக்களுக்கு ஆதரவாக சண்டையிடுவதற்காக தங்கள் நாட்டு படை வீரர்களை, சிரியாவுக்கு ரஷ்யா அனுப்பி வைத்துள்ளது.

Related Stories: