குதிரைத் திறனைத் தெரிந்துகொள்ளுங்கள்!

பொதுவாக மின்னியக்கி போன்றவற்றின் திறனை அளக்கவும், தானுந்து, பேருந்து, மகிழுந்து போன்ற உந்து இயந்திரங்களின் திறனையும் அளக்க குதிரைத்திறன் என்ற அலகு பயன்படுகின்றது. இதைச் சுருக்கமாக HP என்று கூறுவர். குதிரைத்திறன் (Horse Power) அல்லது குதிரை வலு எனப்படுவது ஆற்றலை ஓரலகு நேரத்தில் செலவிடும் திறனை அளக்கும் திறனலகுகளில் வழக்கமாகப் பயன்படும் ஓர் அலகு ஆகும்.

1 HP என்பது 746 வாட்டுகள் (0.746 கிலோ வாட்டுகள் (KW) என்ற மின்திறன் அளவிற்குச் சமம்.

சில மோட்டார்களில் HP அளவு குறிப்பிடப்படாமல் கிலோவாட்டுகள் அளவு குறிப்பிடப்பட்டிருக்கும். எடுத்துக்காட்டாக ஒரு நீரேற்றி (பம்பு மோட்டார்) 0.75 கிலோ வாட்டுகள் (KW) எனில் அது ஒரு குதிரைத்திறனுக்குச் (1 HP) சமம். சிறிய அளவிலிருந்து மிகப்பெரிய அளவு வரை பல அளவுகளில் ஒன்றுக்கு குறைவான HP முதல் ஆயிரக்கணக்கான HP வரையுள்ள மோட்டார்களும் இயந்திரங்களும் பயன்படுத்தப்படுகின்றன. ஒன்றும் ஒன்றுக்கு குறைவான HP கொண்ட மோட்டார்களுக்கு ‘பின்ன அளவு குதிரைத்திறன் மோட்டார்’ (Fractional Motor) என்று பெயர்.

ஒன்றுக்குக் குறைவான எண்களை பின்னம் (Fraction) என்று சொல்வதால் இப்பெயர் வழக்கத்தில் உள்ளது. மின்விசிறி, மிக்ஸி, கிரைண்டர், ரெஃப்ரிஜிரேட்டர், ஏசி, வீட்டுக் கிணற்றில் அமைக்கப்படும் நீரேற்றிகள் போன்றவற்றில் ‘பின்ன குதிரை சக்தி மோட்டார்’ (Fractional Motor) தான் இருக்கு மென்றாலும் தேவையைப் பொறுத்து அவை வெவ்வேறு வகையைச் சேர்ந்தவையாக இருக்கும்.

Related Stories: