நடுவானில் பறந்த விமானத்தில் புகை விமானி சாமர்த்தியத்தால் 128 பேர் உயிர் தப்பினர்

சென்னை: சென்னையில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானம் நேற்று அதிகாலை 1 மணிக்கு தோஹா புறப்பட்டது. விமானத்தில் 121 பயணிகள், 7 விமான சிப்பந்திகள் இருந்தனர். விமானம் நடுவானில் சென்றபோது, வால் பகுதியில் புகை ஏற்பட்டது. உடனே சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொண்டு நிலைமையை விமானி  விளக்கினார்.

இதையடுத்து விமானத்தை சென்னைக்கு திருப்புமாறு அதிகாரிகள் உத்தரவிட்டனர். உடனே விமானம் அதிகாலை 1.50 மணிக்கு பத்திரமாக தரை இறங்கியது. 128 பேரும் கீழே இறக்கப்பட்டு ஓய்வறையில் தங்க வைக்கப்பட்டனர்.  பொறியாளர் குழுவினர், விமானத்துக்குள் ஏறி ஆய்வு செய்தனர். இதற்கிடையில், வெகு நேரமாக விமானம் பழுதை நீக்க முடியவில்லை. இதனால் பயணிகள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து, காலை 6 மணிக்கு ஐதராபாத் செல்ல இருந்த விமானத்தை தோஹாவுக்கு மாற்றி பயணிகளை அனுப்பி வைத்தனர்.

Related Stories: