விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதியில் 60 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை

சென்னை: விக்கிரவாண்டியில் 24, நாங்குநேரியில் 36 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் குறித்து  விழுப்புரம் கலெக்டர் சுப்ரமணியன் கூறியதாவது: தொகுதியில் 139 இடங்களில் 275 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 24 வாக்குச்சாவடிகள்  பதற்றமானவை. தேர்தல் நன்னடத்தை விதிமுறைகளை கண்காணிப்பதற்காக மாவட்டம் முழுவதும் பறக்கும்படை, நிலையான கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளது. தேர்தல்பணியில் 1,333 பேர் ஈடுபட உள்ளனர். 29 மைக்ரோ அப்சர்வர்கள்  நியமிக்கப்பட்டுள்ளனர் என்றார். விக்கிரவாண்டி தொகுதியில் மொத்த வாக்காளர்கள் 2,23,387. இதில் ஆண்கள் 1,11,607, பெண்கள் 1,11,546, திருநங்கை 25, தபால்வாக்குகள் 209.

நாங்குநேரி: நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் 31.1.2019 நிலவரப்படி 2 லட்சத்து 56 ஆயிரத்து 414 வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் ஆண்கள் 1,27,025, பெண்கள் 1,29,385, திருநங்கைகள் 4 பேர். மேலும் ஆன்லைன் மற்றும்  நேரடியாக பெயர் சேர்க்க 840 பேரும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் பெயர் சேர்க்க 22 பேரும், பெயர் நீக்க 75 ேபரும், திருத்தம் செய்ய 639 ேபரும், ஒரே தொகுதிக்குள் மாற்ற 97 பேரிடமிருந்தும் மனுக்கள் பெறப்பட்டு பதிவேற்றம் செய்யும் பணி  நடந்து வருகின்றதாக கலெக்டர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்தார். இந்த தொகுதியில் 299 வாக்குச்சாவடிகளில் 36 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Related Stories: