இந்தியா-அமெரிக்கா உறவுகளில் தொடர்ச்சியான ஏற்றம் காணப்பட்டு வருகிறது: ஐ.நா-வின் இந்திய பிரதிநிதி சையது அக்பருதீன்

நியூயார்க்: இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை நோக்குநிலைக்கு பயங்கரவாதம் ஒரு முக்கிய காரணியாக அமைந்துள்ளது, ஏனென்றால் அது நம் மக்களை மிகவும் பாதிக்கிறது என  ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையது அக்பருதீன் கூறியுள்ளார். மேலும், வரும் செப்டம்பர் 27ம் தேதி நடைபெறும் ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில், இந்திய பிரதமர் கலந்து கொள்ள உள்ளார். இந்த கூட்டத்தில் பிரதமர் கலந்து கொள்வதற்கான முக்கிய நோக்கமானது, பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொள்வது, சைபர்ஸ்பேஸ் மூலம் வன்முறையில் ஈடுபடும் தீவிரவாதிகளை தடுப்பது குறித்து விவாதிகவே அவர் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதாக தெரிவித்தார். அதேபோல, பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் இந்தியா 2 முக்கிய முன்னேற்றங்களை கண்டுள்ளது எனக்கூறினார்.

அதில் ஒன்று, இந்த வருடம் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற புல்வாமா தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40 பேர் வீரமரணமடைந்தனர். பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு முதன்முறையாக யு.என்.எஸ்.சி கண்டனம் தெரிவித்துள்ளது. மற்றொன்று, ஒரு தசாப்தத்திற்கும் மேலாக முயற்சித்த பின்னர், ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை அறிவித்தது என கூறினார். இதுவரை பயங்கரவாதத்தை தேசியமயமாக்கிய பாகிஸ்தான், இப்போது வெறுப்பு பேச்சையும் தேசியமயமாக்க பார்க்கிறது என கூறினார். மேலும் ஐ.நா பொதுக்கூட்டத்தில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பங்கேற்கிறார்.

இந்த கூட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பிரச்சனைகள் குறித்து பேச உள்ளார். இந்த நிலையில், இது தொடர்பாக பேசிய அக்பருதீன், உலக நாடுகளின் கவனத்தை ஈர்க்க விதிகளுக்கு புறம்பான விஷயங்களில் பாகிஸ்தான் ஈடுபடுவதாக தெரிவித்தார். இதையடுத்து பேசிய அவர், இந்தியா-அமெரிக்க உறவுகளில் தொடர்ச்சியான ஏற்றம் காணப்படுகிறது. இந்த ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்பை சந்தித்த நான்காவது நிகழ்வு இதுவாகும். இந்தியா மற்றும் அமெரிக்காவின் உறவுகள் இந்தியாவின் வளர்ச்சியில் அதிகம் பிரதிபலிக்கும் என தெரிவித்தார்.

Related Stories: