ஐஎஸ்ஐ.யின் மிரட்டலால் தப்பிய பாக். பெண் ஆர்வலர் அமெரிக்காவில் தஞ்சம்

நியூயார்க்: பாகிஸ்தானை சேர்ந்த பிரபல பெண் சமூக ஆர்வலர் குலாலாய் இஸ்மாயில் (32). இவர், உலகம் முழுவதும் போரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பெண்களை பாதுகாக்கும் அமைப்பை நடத்தி வருகிறார். பாகிஸ்தானில் பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர். இதனால், அந்நாட்டின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ, அந்நிய நாடுகளில் தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக குற்றம்சாட்டி, குலாலாய் நாட்டை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டார். இதனால் அவர் பாகிஸ்தானில் இருந்து கடந்த மாதம் தப்பினார். தற்போது குலாலாய், அமெரிக்காவின் புரூக்கிளினில் தனது சகோதரி வீட்டில் வசிப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Stories: