எங்களுடன் துணை நிற்பதற்கு நன்றி; இந்தியர்களின் உத்வேகத்தால் தொடர்ந்து முன்னோக்கி செல்வோம்; இஸ்ரோ

பெங்களூரு: நிலவின் தென்துருவத்தில் இருக்கும் லேண்டர் விண்கலத்துடன் மீண்டும் தொடர்பு ஏற்படுத்தும் முயற்சியில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நிலவில் சூரிய வெளிச்சம் குறைய தொடங்கியதால் இந்த பிரச்னை ஏற்பட்டுள்ளது. கடந்த ஜுலை 22-ம் தேதி விண்ணில் ஏவப்பட்ட சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து ஆர்பிட்டர் விண்கலம் கடந்த செப்டம்பர் 2-ம் தேதி பிரிந்தது. ஆனால் செப்டம்பர் 7-ம் தேதி லேண்டர் எனப்படும் ஆய்வு விண்கலம் நிலவின் தென்துருவத்தில் மெதுவாக இறக்கப்பட இருந்தது.

ஆனால் தரையை அடைவதற்கு 2.1 கி.மீ. உயரத்தில் இருந்த போது தொடர்பில் இருந்து விலகியது. நிலவின் தரையில் விழுந்த லேண்டர் விண்கலத்தையும், அதில் வைக்கப்பட்டிருந்த ரோபர் ரோபோவையும் மீண்டும் இயக்கத்திற்கு கொண்டு வர அமெரிக்காவும் உதவ முன்வந்தது. ஆனாலும் லேண்டர் விண்கலத்தில் இருந்து மீட்டெடுக்க முடியவில்லை.

ஆனாலும் 20-ம் தேதி வரை 20-ம் தேதி வரை முயற்சிகள் நடைபெறும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது. இதனிடையே 2022-ம் ஆண்டுக்குள் விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு டி.ஆர்.டி.ஓ. எனப்படும் பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனத்துடன் இஸ்ரோ ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி இஸ்ரோவுக்கு தேவையான உபகரணங்களை வழங்க உள்ளது.

நன்றி தெரிவித்த இஸ்ரோ

எங்களுக்கு ஆதரவாக நின்றதற்கு நன்றி. நம்பிக்கைகள் மற்றும் உலகெங்கும் உள்ள இந்தியர்களின் கனவுகள் அளிக்கும் உத்வேகத்தால் நாம் தொடர்ந்து முன்னோக்கிச் செல்வோம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Related Stories: