செங்குன்றம் அடுத்த ஆலமரம் பகுதியில் விபத்துகளை தடுக்க விழிப்புணர்வு கூட்டம்: 500 லாரி டிரைவர்கள் பங்கேற்பு

புழல்: செங்குன்றத்தில் விபத்துக்களை தடுப்பது குறித்து தண்ணீர் டேங்கர் லாரி டிரைவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தமிழ்நாடு தனியார்  தண்ணீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பாக தண்ணீர் டேங்கர் லாரி டிரைவர்களுக்கு விபத்துக்களை தடுப்பதற்கான  வழிமுறைகள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் செங்குன்றம் அடுத்த ஆலமரம் பகுதியில்  நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு தனியார் தண்ணீர் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் மேடவாக்கம் என்.நிஜலிங்கம் தலைமை தாங்கினார். சங்க மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா அனைவரையும் வரவேற்றார். சங்க நிர்வாகிகள்  செல்வராஜ், சரவணன், மணிமாறன், செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட 500க்கும் மேற்பட்ட தண்ணீர் டேங்கர் லாரி டிரைவர்களுக்கு, ‘‘வாகனங்கள் ஓட்டும்போது செல்போன் பேசிக்கொண்டு ஓட்டக்கூடாது. குடித்துவிட்டு ஓட்டக்கூடாது, சாலை விதிமுறைகளை மீறக்கூடாது.  சாலையில் நடந்து செல்பவர்களை தனது உறவினர்கள் போல் பாவிக்க வேண்டும். தன்னுடைய குடும்பத்தை கவனத்தில் கொண்டு கவனக்குறைவாக வாகனங்களை ஓட்டக்கூடாது’’ என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் மாநிலச் செயலாளர் முருகன், மாநிலப் பொருளாளர் மணி, திருவள்ளூர் மாவட்ட தலைவர் சாமி ராஜேந்திரன், தென்சென்னை மாவட்ட தலைவர் செல்வராஜ், வட சென்னை மாவட்ட தலைவர் ஜான், மத்திய  மாவட்ட தலைவர் ரமேஷ், மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் 500க்கும் மேற்பட்ட லாரி டிரைவர்களுக்கு சீருடை வழங்கப்பட்டது.

Related Stories: