போலீசாரை சங்கடத்தில் ஆழ்த்திய சர்ச்சை வீடியோ சைக்கிளில் சென்ற மாணவனுக்கு ஹெல்மெட் அணியாததற்கு அபராதம்?

பென்னாகரம்: இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெல்மெட் அணியாவிட்டால் கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஏரியூரில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட போலீசார், சைக்கிளில் சென்ற மாணவனுக்கு ஹெல்மெட் அணியவில்லை என்று கூறி, அபராதம் விதித்ததாக ஒரு வீடியோ நேற்று வைரலானது. இதனால் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் சென்றாலும் அபராதமா? என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்து பெரும்   சர்ச்சையை கிளப்பியுள்ளது.  

இதுகுறித்து ஏரியூர் போலீசார் கூறுகையில், ‘‘நேற்று முன்தினம் மாலை, நாங்கள் ஏரியூர் பகுதியில் ஹெல்மெட் அணியாமல் செல்வோரை கண்காணித்துக்கொண்டிருந்தோம். அப்போது 17 வயது மாணவன், ஹேண்டில் பாரை பிடிக்காமல் ‘ஹாயாக’  கையை விட்டபடியே, தமிழக அரசின் விலையில்லா சைக்கிளை ஓட்டி வந்தான். அப்போது எஸ்.ஐ., சுப்ரமணி அவரை தடுத்து நிறுத்தி ஓரமாக அழைத்துச் சென்றார். இப்படி கையை விட்டு சைக்கிள் ஓட்டுவதால், உனக்கு மட்டுமின்றி ரோட்டில் செல்வோருக்கும் பாதிப்புகள் ஏற்படும் என்று கூறி, எச்சரித்து அனுப்பி வைத்தார். மற்றபடி எந்த அபராதமும் விதிக்கவில்லை,’’ என்றனர்.

Related Stories: