ஜெயலலிதா படப்பிடிப்பு தளம் அமைக்க தமிழக அரசு சார்பில் 1 கோடி: முதல்வர் எடப்பாடி வழங்கினார்

சென்னை: காஞ்சிபுரம் பையனூரில் உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு படப்பிடிப்பு தளத்தின் அருகில் ஜெயலலிதா படப்பிடிப்பு தளம் அமைக்க தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.5 கோடி நிதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, முதல்கட்டமாக தமிழ்நாடு அரசின் சார்பில் 1 கோடி ரூபாய்க்கான காசோலையை தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணியிடம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வழங்கினார். நிகழ்ச்சியில், செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, தலைமை செயலாளர் சண்முகம், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை செயலாளர் (முழு கூடுதல் பொறுப்பு) கார்த்திக், செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குநர்  சங்கர், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர்.வி.உதயகுமார், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் நிர்வாகிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: